
அதிகாலை பனி துளி . .
ஆம், தூக்கம் களைந்து ஜன்னலின் வெளியே என் பார்வை
ஜில்லென்ற கதகதபால் ஊட்டி ஆனவள்
பசுமை புல் வெளியினால் தன்னை போர்த்தியபடி என்னை கீழே அழைத்தாள் ..
என்னவளை மட்டுமே தேடும் என் இதயம், என்று தெரியாமல் !!!
வெளியே வந்த என்னை சூழ்ந்தது பனி வாடை காற்று . .
என் மேனி மூடி , ஊண்ணில் கலந்து , உயிரில் தேடியும்
கிட்டவில்லை அதற்கு என் இதயம்!!!! ...
பக்கத்து தோட்டத்தில் பாடும் , காதல் பறவைகளும் . .
மனதினுள் பாடும் , ராஜாவின் இசை வயலினும் ...
தூரத்தில் கேட்கும் சின்ன மலை அருவியும் கூட . .
எனக்கு நினைவு படுத்தியதோ என்னவளின் கவிதைகளே !!
ஆம், அவள் கூறும் இரு வரி கவிதை ... " ஹ்ம்ம்ம்ம் சொல்லுங்க " !!!!!
கோபமுற்ற ஊட்டியோ மழை சாரல் தருவிக்க
சிரித்தபடி தாவினேன் வீட்டினுள்ளே . .!!!
நனைந்து கொண்டிருந்தன ஊட்டி அவளின் ரோஜாவும் ,,
அழகிய பச்சை மரங்களும் , மற்றும் அதிகாலை நிலவும் . .
அவளிடம் விடை பெரும் பொழுது கேட்டாள்......!!
அவளிடம் ஏன் மனதை தொலைக்கவில்லை என்று ....??
அவளிடம் கூறினேன் , அவளின் ஈரமான ரோஜாவையும் விட
அழகானவை, என்னவளின் கயல் விழிகள் என்று . . !!!
அவளின் வட்ட விழி சாலையை விட
வளைவில் சிறந்தவை என்னவளின் கண் புருவம் என்று . .!!!
எந்த ஒரு மூடு பனியும், வாடை காற்றும் , பனி துளியும்
கரைந்தே போகும் என்னவள் மெல்ல சிரித்தால் என்று . .!!!
ஊட்டியின் மலை சாரலும் மழை துறலும், மண்டியிடும் . .
என்னவளின் கண்கொள்ள துர பார்வையில் . .
அதுவும், என்னை தேடும் பொழுதெல்லாம் என்று !!!!!
மௌனமுடன் கேட்டு கொண்டிருக்கும் ஊட்டியிடம் கூறினேன்
காணவும் வேண்டுமா ??? என்னவளையும், தொலைந்த என் இதயத்தையும் என்று ???
ஆம் என்றாள் . !! !!
வெகு விரைவில் அழைத்து வருகிறேன் என்னவளை . .
ஆனால் பத்திரப்படுத்திக்கொள் உன் இதயத்தை . .
அவளின் வளையல் ஓசையில் மயங்கியே விடும் உன் காதல் பறவைகள் ...
மற்றும் !!!!
ஓலிக்கும் அவள் கொலுசின் ஓசையில், பூக்கும் புற்கள்
எல்லாம் தேடும் அவள் பாதங்களையே . .!!!
அவள் பார்வை பட ஏங்கும் உன் தோட்டத்து ரோஜாக்களும் , மலர்களும்
அவள் விரல்கள் பட்டால் அடைந்து விடும் மோக்ஷத்தை, வெட்க்கத்தினால் . .
பரவாயில்லையா என்றதற்கு சரி என்றாள் ஊட்டி . .
நான் என்னவளுடன் போவதற்குள் கண்டு விடுங்கள் ஊட்டியை . .
இல்லையென்றால் !!!!!
தொலைந்தே போயிருக்கும் ஊட்டியும் , என்னவளிடம் ....
என்னைப்போல் !!!!!!!
:)
:)