மின்னுவதே பொன் என்று சுற்றி திரியும் கூட்டத்தில் ஒருவனடா நீ …
தானே பண்டிதன் , நானே மேதை, நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் ..
என்று மார் தட்டும் கோட்டில் நீயும் ஒரு புள்ளி …
வாழ்கின்ற வாழ்கையில் , சேருவாரையும் கூடுவோரையும் ...
குறைத்து குதப்பும் மாந்தரின் மந்தையில் , ஒருவனடா நீ ..
சூரியனை காண முடியாமல் , அருகில் நெருங்கவும் இயலாமல் ...
விளக்கினை சுற்றும் விட்டில் பூச்சியில் நீயும் ஓர் பூச்சி ..
உண்டோம் , உறங்கினோம் , வம்பு வளர்த்தோம் ...
சென்றோம் , பேசினோம் , நேரம் கழித்தோம் ...
வந்தோம் , வளர்ந்தோம் , வினவி வதிக்கினோம் ..
கலந்தோம் , கழித்தோம் , கிழித்தே பழகினோம் ....
என்று இல்லமால் .........
முயர்ச்சிபவனின் முயற்ச்சிகளை, முயன்றாமல் முடக்கும் மூடத்தனத்தை முயலாதே ...
தேன் மட்டும் இனிப்பன்று .. கரும்பும் தான் ...
நிலவு மட்டும் அழகன்று ...வானும் தான் ...
இசை மட்டும் தேனன்று ..நண்பனின் குரலும் தான் ...
கவிஞர் மட்டும் கவியன்று .. மற்ற சிறு கவிகளும் தான் ...
உணர்ந்து கொள் , புரிந்து கொண்டு , அணைத்து கொள் .....
.
Sunday, May 16, 2010
Subscribe to:
Comments (Atom)