Sunday, July 26, 2026

தூங்கும் மகன்

உன்னக்குள் இருக்கும் என்னை, 
எனக்குள் இருந்து, என் தந்தையாய், பார்க்கிறேன்

இப்படி தான் அவரும் என்னை ரசித்திருப்பாரோ!!



 

Saturday, December 9, 2023



வெற்றி கண்ட காதல் உணருமோ!






தோற்ற,  காதல் நினைவலைகள் தரும்

மெல்லிய வலி கூடிய சுகத்தினையும் 


கழிந்த வாழ்வின் இன்பம் நிறைந்த நினைவுகள்,

பிரிந்த சொந்தங்கள், 


நேசித்த உறவுகள், மற்றும் உள்ளங்கள், இல்லாத 

இந்நிகழ்காலத்தில்,


ஏகாந்த ஓர் இரவில், 


பழைய நினைவுகளுடன் ஓர் இனிய பயணம்,


அம்மனக்காட்சிகள் தரும் இன்பமது 

உணருமோ ஜெயித்த காதல்? 

Saturday, December 24, 2022

Soul mate

 ஒரே இடத்தில நாம் இருந்தும்

பார்த்து பேச சூழல் இல்லை....

.. ஆனால்!! 

பேசிய வார்த்தைகள்தான் முற்று பெரும் 

பேசா வார்த்தைகளுக்கோ சுகம் அதிகம் 



நீ தான்

 வெகு தூரம் நீ இருந்ததாலேயே ..

கண்டுகொண்டேன், 

மனசுக்கும் கண்கள் உன்றென்று  😍



Friday, December 8, 2017

என்னவள்


எனக்கு ஓர் கவிதை சொல்லுங்களேன் என்றாள்
'அதுவே' என்றேன்
இல்லை நிஜமான கவிதை வேண்டும் என்றாள்
'நீதான்' என்றேன்

Saturday, April 20, 2013

To my dear Wife :-*





சித்திர பூவில் தேன்  தேடி களைத்தன என் கரு விழிகள் .........................(வீடியோ chat இல் என்னவளின் கண்கள் )

Sunday, May 16, 2010

For friend Karthi, who has never read my blog..bt ready to compare me with kannadasan and ill treat me..

மின்னுவதே பொன் என்று சுற்றி திரியும் கூட்டத்தில் ஒருவனடா நீ …

தானே பண்டிதன் , நானே மேதை, நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் ..
என்று மார் தட்டும் கோட்டில் நீயும் ஒரு புள்ளி …

வாழ்கின்ற வாழ்கையில் , சேருவாரையும் கூடுவோரையும் ...
குறைத்து குதப்பும் மாந்தரின் மந்தையில் , ஒருவனடா நீ ..

சூரியனை காண முடியாமல் , அருகில் நெருங்கவும் இயலாமல் ...
விளக்கினை சுற்றும் விட்டில் பூச்சியில் நீயும் ஓர் பூச்சி ..

உண்டோம் , உறங்கினோம் , வம்பு வளர்த்தோம் ...
சென்றோம் , பேசினோம் , நேரம் கழித்தோம் ...
வந்தோம் , வளர்ந்தோம் , வினவி வதிக்கினோம் ..
கலந்தோம் , கழித்தோம் , கிழித்தே பழகினோம் ....

என்று இல்லமால் .........

முயர்ச்சிபவனின் முயற்ச்சிகளை, முயன்றாமல் முடக்கும் மூடத்தனத்தை முயலாதே ...

தேன் மட்டும் இனிப்பன்று .. கரும்பும் தான் ...
நிலவு மட்டும் அழகன்று ...வானும் தான் ...
இசை மட்டும் தேனன்று ..நண்பனின் குரலும் தான் ...
கவிஞர் மட்டும் கவியன்று .. மற்ற சிறு கவிகளும் தான் ...

உணர்ந்து கொள் , புரிந்து கொண்டு , அணைத்து கொள் .....

.