Saturday, September 12, 2009

பிரிவு


தனிமை பயணத்தில்,
நிம்மதியாய் சென்றேன் ….
நம் ஓட்டுநரோ நம்மை ஒட்டி வைத்தார் . .
உன் கை பற்றி சென்ற நாட்கள் . .
பேச்சுக்கள் , சண்டைகள் . .
சீண்டல்கள் , கிண்டல்கள் . .
யார் கண் பட்டதோ ???
நம் நட்பில் . .
இன்று அனைத்தும் ஓர் சூனியம் . .
இம்மௌனத்தின் சூனியத்தில் . .
நீ மூடிய உன் விழியில் . .
இருண்டதே இவ்வுலகம் எனக்கு . .
கடல் அலையில் சிக்கிய
சிறு துளியாய் . .
நம் நட்புகாலங்களில் நானும் மூழ்கி . .
அலைகழிந்தேன் . . . .
இலைகள் அற்ற ஓர் மரத்தின் கீழ் . .
நிழலுக்கு ஒதுங்கினேன் . .
சுட்டெரிக்கும் சூரியனும்
நகைத்தது . . எங்கே உன் நிலவென்று ??
பாலைவனத்தில் விழுந்த மழை துளியாய்
உன் பிரிவென்ற வெப்ப பூமி என் உயிரென்ற
மழை துளியை ,
வெறியுடன் பருகி கொண்டிருந்தது . .
உயிருள்ள ஜடப்பொருள் ஆனோம் ,
நானும். . , என் கைபேசியும் . ., நம் நட்பும் . .
கரைந்து கொண்டிருக்கும் உயிருடன் . .
தேடி கொண்டிருக்கிறேன் .. நம் ஓட்டுனரை . .
எதற்காக என்றா ? ? ?
மீண்டும் நம்மை ஒட்டி வைக்க . .

No comments: